Thursday, 21 May 2009

தாயகத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை கரிநாளாக அனுட்டிப்போம் - சுவிஸ் தமிழர் பேரவை


தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டம் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்துள்ள இன்றைய சு10ழ் நிலையில்; 'இறுதிக் கட்டத் தாக்குதல்கள்" என சிங்கள அரசினால் வர்ணிக்கப்பட்ட கொலைகாரத் தாக்குதல்களில் புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்களில் ஏறக்குறைய அனைத்துக் குடும்பங்களுமே ஆகக் குறைந்தது ஒருவரையாவது இழந்து நிற்கின்றன.
தாயக விடுதலை கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் எதிரிகளின் இடைவிடாத எறிகணை வீச்சுக்கள் நாசகார விமானக் குண்டு வீச்சுக்கள் என்பவற்றுக்கு முகம் கொடுத்து தமது உயிரைக் காவியமாக்கிய அந்த 'மாமானிதர்"களுக்கு மனதார அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியமும் கடப்பாடும் விடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் தமிழ் மகளுக்கும் உள்ளது.

இந்தக் காலகட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை கூட எவ்வளவு எனத் தெரியாத ஒரு துன்பமான சு10ழ்நிலையில் நாம் இருக்கிறோம். இருந்தாலும் கூட அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் விலை மதிக்க முடியாதது. இந்நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை ஒரு துக்கநாளாக கரிநாளாக புலம்யெர் நாடுகளில் அனுட்டிக்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணிக்கு Zurich; நகரில் உள்ள Helvetia Platzல் நடைபெறும் விசேட பிரார்த்தனையிலும் அஞ்சலி நிகழ்விலும் கலந்து கொண்டு தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்குமாறு சுவிஸ் வாழ் தமிழர்கள் ஒவ்வொருவரையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம். அதேவேளை இந்த அஞ்சலி நிகழ்வு தொடர்பாக உங்களுக்குத் தெரிந்த சுவிஸ் நாட்டவருக்குத் தெரிவிப்பதுடன் முடிந்தால் அவர்களையும் அழைத்து வருமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

உங்கள் வீடுகளில் வாகனங்களில் வேலைத்தளங்களில் கறுப்பு கொடி கட்டி நினைவு கூருவோம்.

கைகளில் கறுப்பட்டி அணிவோம்

ஆடைகளில் கறுப்பு இலச்சினை அணிவோம்.

ஊடகங்களில் கறுப்பு இலச்சினை பதிப்போம். (உதாரணம் -தொலைக்காட்சியில் ஒரு மூலையில் கறுப்பு கொடி பறக்கவிடல் )

நண்பகல் 12 மணியிலிந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம்.


தமிழ் மக்களுக்கு எதிரான போரை வென்றுவிட்டதாக சிங்களப் பேரினவாதம் இன்று ஏக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றது. ஒரு சில தசாப்த காலமாவது நெஞ்சை நிமிர்த்தி நடைபயின்ற ஈழத் தமிழன் இன்று 'அனைத்தையும் இழந்த" நிலைமைக்கு வந்து விட்டதாக எதிரிகள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலைமை நீடிக்க அனுமதிக்கக் கூடாது.

எமது மக்கள் சிந்திய குருதிக்கும் புரிந்த தியாகத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டுமானால் தாயகத்திலே தமிழ் மக்கள் உரிமை பெற்றவர்களாக வாழச் செய்யப்பட வேண்டும். அதற்காகப் பாடுபட வேண்டிய ஏதுநிலையும் வாய்ப்பும் புலம்பெயர் தமிழர்களுக்கு மாத்திரமே உள்ளது. எனவே நாம் எமது சக்தியை அந்தத் திசையை நோக்கித் திருப்பிவிட வேண்டும். எனவே காலத்தின் தேவை கருதி கை கோர்க்க அழைக்கின்றோம்.

வாரீர்! புதிய சரித்திரம் படைப்போம்!

சுவிஸ் தமிழர் பேரவை
பிரான்ஸ், டென்மார்க், அவுஸ்திரேலியா,கனடா நாடுகளில் நாளை துக்கதினம் அனுஷ்டிப்பு

No comments:

Post a Comment