Monday, 25 May 2009

இரண்டாம் உலகப் போரின் தடுப்பு முகாம்களை இங்கு காண்கிறேன்: ஐ.நா. மனித உரிமைகள் இணைப்பாளர் தெரிவிப்பு


உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு முகாம்களில் ஒன்றான வவுனியா மனிக் பார்ம் முகாமில் 200,000க்கும் அதிகமான மக்கள் தமது எதிர்ப்பார்ப்புகள் தகர்க்கப்பட்டு முட்கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.


தாங்கள் திறந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரமாகவே வாழ விரும்புவதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வவுனியா தடுப்பு முகாமிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் அவருடன் சென்றிருந்த த டைம்ஸின் செய்தியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

மனிக் பார்ம் முகாமை முகாம் என்பதை விட சிறை என்றும் காட்சிக் கூடம் என்றுமே அழைக்க வேண்டும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த அடக்குமுறைகளை பிரயோகிக்கும் இராணுவத்தினர் மத்தியிலும் கூடாரங்களாக அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழிகளுக்கு மத்தியிலும் மக்கள் பரிதவிக்கின்றனர்.

இதற்கிடையில் அந்த பொது மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாகவும் முட்கம்பிகளுக்கு இடையில் மக்கள் வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் இணைப்பாளர் ஜெர்சன் பரான்டோ தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலக போரின் பின்னர் அமைக்கப்பட்ட முகாம்கள் தொடர்பில் புத்தகங்களில் தாம் படித்துள்ளதாகவும் மனிக்பார்ம் முகாம்களை பார்க்கும் போது அவற்றை மீண்டும் நேரடியாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அங்குள்ள இளைஞர்கள் முன்வந்து உண்மையை சொல்ல முற்பட்டால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என முகாமில் உள்ளவர்கள் தெரிவித்தாக த டைம்ஸ் செய்தியாளர் தமது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முகாம்களின் மக்கள் உணவோ சுத்தமான நீரோ இன்றி மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் த டைம்ஸ் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Thursday, 21 May 2009

இராணுவ முகாம்களில் பெண்கள் கற்பழிப்பு, ஆண்கள் காணாமற் போகிறார்கள்: பிரித்தானியா ஸ்கை (SKY News Video) செய்திகள்


சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கப்படும் தமிழ்ப் பெண்களை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாக பிரித்தானியா ஊடகமான ஸ்கை செய்திகளுக்குச் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன

இராணுவ முகாம்களில் பெண்கள் கற்பழிப்பு, ஆண்கள் காணாமற் போகிறார்கள்: பிரித்தானியா ஸ்கை (SKY News Video) செய்திகள்
[ வியாழக்கிழமை, 21 மே 2009, 09:44.35 PM GMT +05:30 ]
சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கப்படும் தமிழ்ப் பெண்களை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாக பிரித்தானியா ஊடகமான ஸ்கை செய்திகளுக்குச் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.


சிறிலங்கா அரசினது இவ் முகாம்களில் பெண்கள் பலர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், இளைஞர்கள் பலர் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதாகவும் பல அறிக்கைகள் கூறுகின்றன என்று ஸ்கைச் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.

40க்கும் மேற்பட்ட முகாம்களில் 200,000க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இவற்றிற்குள் செல்ல பல உதவி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென்றும், ஆனால் இவ்முகாம்களுக்குள் சுதந்திரமாகச் சென்று மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான வசதிகளை, அராசங்கம் செய்யவேணடும் எனக் கோருவதற்காக, ஐ.நா. பாதுகாப்பு குழுவின் செயலாளர் நாயகம், பான் கி முன் அவர்கள், சிறிலங்காவுக்கு பயணம் செய்துள்ளதாகவும், அச்செய்தி தெரிவித்துள்ளது.

ஸ்கைச் செய்திகளோடு கதைத்த, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒரு பெண் ‘முகாம்களில் பல பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் மற்றும் இளைஞர்கள் பலர் காணாமற்போவதாகவும், அவர்களின் விபரங்கள் பின்பு கிடைக்காமலே போகிறது’ எனவும் கூறியுள்ளார்.

“எங்களை ஆதரிக்கவும் தற்காப்புத் தருவதற்கும் யாருமே இல்லையென்றே நாங்கள் வருந்துகிறோம் என்றும், தனிமைப்பட்டுள்ளதாகவே நாம் உணருகின்றோம்” எனவும் பெண் ஒருவர் ஸ்கைச் செய்திளோடு கதைக்கும் போது தெரிவித்துள்ளார்.

Tamils Allege Rapes In Government Camps (SKY News Ling)

தாயகத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை கரிநாளாக அனுட்டிப்போம் - சுவிஸ் தமிழர் பேரவை


தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டம் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்துள்ள இன்றைய சு10ழ் நிலையில்; 'இறுதிக் கட்டத் தாக்குதல்கள்" என சிங்கள அரசினால் வர்ணிக்கப்பட்ட கொலைகாரத் தாக்குதல்களில் புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்களில் ஏறக்குறைய அனைத்துக் குடும்பங்களுமே ஆகக் குறைந்தது ஒருவரையாவது இழந்து நிற்கின்றன.
தாயக விடுதலை கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் எதிரிகளின் இடைவிடாத எறிகணை வீச்சுக்கள் நாசகார விமானக் குண்டு வீச்சுக்கள் என்பவற்றுக்கு முகம் கொடுத்து தமது உயிரைக் காவியமாக்கிய அந்த 'மாமானிதர்"களுக்கு மனதார அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியமும் கடப்பாடும் விடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் தமிழ் மகளுக்கும் உள்ளது.

இந்தக் காலகட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை கூட எவ்வளவு எனத் தெரியாத ஒரு துன்பமான சு10ழ்நிலையில் நாம் இருக்கிறோம். இருந்தாலும் கூட அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் விலை மதிக்க முடியாதது. இந்நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை ஒரு துக்கநாளாக கரிநாளாக புலம்யெர் நாடுகளில் அனுட்டிக்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணிக்கு Zurich; நகரில் உள்ள Helvetia Platzல் நடைபெறும் விசேட பிரார்த்தனையிலும் அஞ்சலி நிகழ்விலும் கலந்து கொண்டு தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்குமாறு சுவிஸ் வாழ் தமிழர்கள் ஒவ்வொருவரையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம். அதேவேளை இந்த அஞ்சலி நிகழ்வு தொடர்பாக உங்களுக்குத் தெரிந்த சுவிஸ் நாட்டவருக்குத் தெரிவிப்பதுடன் முடிந்தால் அவர்களையும் அழைத்து வருமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

உங்கள் வீடுகளில் வாகனங்களில் வேலைத்தளங்களில் கறுப்பு கொடி கட்டி நினைவு கூருவோம்.

கைகளில் கறுப்பட்டி அணிவோம்

ஆடைகளில் கறுப்பு இலச்சினை அணிவோம்.

ஊடகங்களில் கறுப்பு இலச்சினை பதிப்போம். (உதாரணம் -தொலைக்காட்சியில் ஒரு மூலையில் கறுப்பு கொடி பறக்கவிடல் )

நண்பகல் 12 மணியிலிந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம்.


தமிழ் மக்களுக்கு எதிரான போரை வென்றுவிட்டதாக சிங்களப் பேரினவாதம் இன்று ஏக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றது. ஒரு சில தசாப்த காலமாவது நெஞ்சை நிமிர்த்தி நடைபயின்ற ஈழத் தமிழன் இன்று 'அனைத்தையும் இழந்த" நிலைமைக்கு வந்து விட்டதாக எதிரிகள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலைமை நீடிக்க அனுமதிக்கக் கூடாது.

எமது மக்கள் சிந்திய குருதிக்கும் புரிந்த தியாகத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டுமானால் தாயகத்திலே தமிழ் மக்கள் உரிமை பெற்றவர்களாக வாழச் செய்யப்பட வேண்டும். அதற்காகப் பாடுபட வேண்டிய ஏதுநிலையும் வாய்ப்பும் புலம்பெயர் தமிழர்களுக்கு மாத்திரமே உள்ளது. எனவே நாம் எமது சக்தியை அந்தத் திசையை நோக்கித் திருப்பிவிட வேண்டும். எனவே காலத்தின் தேவை கருதி கை கோர்க்க அழைக்கின்றோம்.

வாரீர்! புதிய சரித்திரம் படைப்போம்!

சுவிஸ் தமிழர் பேரவை
பிரான்ஸ், டென்மார்க், அவுஸ்திரேலியா,கனடா நாடுகளில் நாளை துக்கதினம் அனுஷ்டிப்பு

முல்லை காட்டுக்குள் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் - புதிய தகவல்கள்

புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல், 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு


ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.
புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 60க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்

3000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 60-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்

புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.